மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி.! ஓங்கி ஒலித்த ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய்..கோஷம்.!



bjp victory celebration

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.  இவற்றின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.  இதில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.  

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்தநிலையில், 4 மாநில தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை முன்னிட்டு குஜராத்தின் ஆமதாபாத் நகரில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி சென்றார். அப்போது சாலையின் இருபுறத்திலும் பொதுமக்கள் திரளாக கூடியிருந்தனர்.  

பிரதமர் வருகையையடுத்து கூட்டத்தினரை கட்டுப்படுத்த அதிகப்படியான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த பேரணியின்போது, கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் மக்கள் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய் என கோஷங்களை எழுப்பினர்.