பாஜக எம்எல்ஏ-வை செருப்பால் அடித்த பாஜக எம்பி; வைரலாகும் வீடியோ!bjp-mp-slapped-bjp-mla-with-shoe

உத்திரப் பிரதேசம் மாநிலம் சந்து கபீர் நகர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாஜக எம்பி சரத் திருப்பதி, அந்தப் பகுதி பாஜக எம்எல்ஏவான ராகேஷ் சிங்கை அனைவர் முன்னிலையிலும் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. 

உத்திரப் பிரதேசம் மாநிலம் சந்து கபீர் நகர் மாவட்டத்தில் சமீபத்தில் அரசு சார்பில் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் முடிவில் முக்கிய நபர்களின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டன. இதில் அந்த பகுதியை சேர்ந்த எம்பி சரத் திருப்பதியின் பெயர் இடம்பெறவில்லை. 

bjp

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாஜக எம்பி சரத் திருப்பதி மற்றும் எம்எல்ஏ ராகேஷ் சிங்க் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சரத் தனது பெயரை ஏன் கல்வெட்டில் போடவில்லை என எம்எல்ஏ ராகேஷிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மிகுந்த கோபமடைந்த எம்பி சரத் தனது செருப்பால் எம்எல்ஏ ராகேஷை ஆக்ரோசமாக தாக்க துவங்கினார். ராகேஷும் எதிர்த்து தாக்கவே சண்டை முற்றியது. ஒருவழியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை பிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.