13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் பாஜக எம்.பி சகோதரர் கைது; அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி.!
நாடாளுமன்றத்தில் அவை கூட்டத்தொடரின் போது வண்ணப் புகை வீசிய சர்ச்சை விவகாரத்தில், பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா சிக்கியிருந்தார்.
இந்நிலையில், இவரின் சகோதரர் விக்ரம் சிம்ஹா, தற்போது மரக் கடத்தல் வழக்கில் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்தகொண்டனஹள்ளி கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான 130 மரங்களை அவர் வெட்டிக்கடத்தியது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை நடத்திய அதிகாரிகள் குற்றச்சாட்டினை உறுதி செய்யவே, பெங்களூரு வனத்துறை அதிகாரிகள் விக்ரம் சிம்ஹாவை கைது செய்து இருக்கின்றனர்.