இந்தியா சினிமா

பெத்த பிள்ளையால் தற்போது ஷாருக்கானுக்கு வந்த புதிய சோதனை!! எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..

Summary:

பெத்த பிள்ளையால் தற்போது ஷாருக்கானுக்கு வந்த புதிய சோதனை!! எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..

சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவிற்கு மூன்று நாள் பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்லியா என்ற சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் ஏராளமான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, போதை பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் எடுக்க பல முயற்சிகள் நடைப் பெற்ற நிலையில் விசாரணையில், ஆர்யன்கான் தானும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தியளவில் பிரபலமாக இருக்கும் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட  சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளநிலையில், போதைப் பொருள் வழக்கில் ஆர்யன்கான் சிக்கிய நிலையில், அவரது தந்தைக்கு வரவேண்டிய விளம்பர வாய்ப்புகள் தற்போது பறிபோயுள்ளன.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி நிருவமான பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்மறை கருத்துக்களால் அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement