மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
என்ன ஒரு தில்லாலங்கடி வேலை... இந்த டிசைன்ன காட்டுங்க! பேசிக்கொண்டே கடைக்காரர் கவனத்தை திசை திருப்பி பெண் செய்த அதிர்ச்சி காரியம்! ரூ 8 லட்சம் மதிப்பு நகைகள் அபேஸ்..ஷாக்கிங் வீடியோ..!!!
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் நகை வாங்குவது போல் நடித்து இரண்டு பெண்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகைக்கடையில் இந்த திருட்டு நடந்துள்ளது. சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கவனத்தை திசைதிருப்பி நகைகள் திருட்டு
நகை வாங்குவதற்காக கடைக்கு வந்த இரண்டு பெண்களும், தங்களுக்கு தேவையான நகைகளை காட்டுமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து, கடை உரிமையாளர் பல்வேறு நகைகளை எடுத்து அவர்களுக்கு முன்னால் வைத்துக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... பிணத்தை கூட விட்டுவைக்கல.... துப்புரவு பணியாளர் செய்த அதிர்ச்சி காரியம்..! சிக்கிய சிசிடிவி காட்சி...!!!
அப்போது ஒரு பெண் தொடர்ந்து பேசி நகைக்கடைக்காரரின் கவனத்தை திசைதிருப்பியுள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்திய மற்றொரு பெண், கடையில் வைக்கப்பட்டிருந்த சில நகைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவற்றை தனது வாய்க்குள் மறைத்து வைத்துள்ளார்.
வாயில் மறைத்த நகைகளை ஆடைக்குள் மாற்றிய பெண்
வாயில் நகைகள் இருந்த நிலையில், சிறிது நேரத்துக்குப் பிறகு அவற்றை வெளியே எடுத்த அந்தப் பெண், தனது ஆடைகளுக்குள் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இருவரும் இயல்பாக நகைகளை பார்த்துக்கொண்டே இருந்ததால், கடை உரிமையாளருக்கு உடனடியாக சந்தேகம் ஏற்படவில்லை.
பெண்கள் சென்ற பிறகு நகைகளை சரிபார்த்தபோதுதான் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகள் காணாமல் போனது தெரியவந்ததாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். நகை திருட்டு தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.
போலீசார் விசாரணை
இதையடுத்து சந்த்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, நகைகளை திருடிச் சென்ற பெண்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிஜ்னோர் நகைக்கடை திருட்டு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
बिजनौर : दो महिलाएं सुनार के दुकान पर जेवरात लेने पहुंची। दूकानदार ने मांग की गई जेवरात को इन महिलाओं के आगे रखा। उनमे से एक महिला ने दुकानदार को अपनी बातों में उलझाए रखी तभी दूसरी महिला मौक़ा पाकर जेवर को मुंह दबा लेती।
दुकानदार बेफिक्र होकर जेवर दिखाता रहा ये दोनों महिलाएं कांड करती रही। जब महिला का मुंह जेवर से भर गया तो चालाकी करकर जेवर को मुंह से निकालकर कपड़े में रख लिया। ज्वैलर के मुताबिक- 8 लाख रुपये का नुकसान हुआ है। चांदपुर थाना क्षेत्र का पूरा मामला
— Ashish Paswan (@ashishpaswan0) September 15, 2026
இதையும் படிங்க: சாலையில் சாமியார் வேடமிட்டு நைசாக பேசி நகைகளை திருடிய போலி சாமியார்கள்! காரில் பெண்களிடம் நடந்த கொள்ளை... அதிர்ச்சி காட்சி!!!