தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்!! இரவு தூங்க சென்றவருக்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி..

தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்!! இரவு தூங்க சென்றவருக்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி..


Bihar man bite the snake for revenge

தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம், மதோத் என்ற கிராமத்தில் வசித்துவந்தார் 65 வயதான ராம் மாட்டூ என்ற நபர். மதுகுடிக்கும் பழக்கமுடைய இவர், சம்பவத்தன்றும் பயங்கர மதுபோதையில் இருந்துள்ளார். இந்நிலையில் ராம் மாட்டூ தனது வீட்டின் அருகே உள்ள மரத்தடிக்கு சென்றுபோது அங்கிருந்த குட்டி பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன்னை கடித்த பாம்பை கையில் பிடித்து பலமுறை கடித்து துப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். அது குட்டி பாம்புதான், அதில் விஷம் இருக்காது, நான் மருத்துவமனைக்கு வரவில்லை எனக்கூறிவிட்டு ராம் மாட்டூ தூங்க சென்றுள்ளார்.

குடும்பத்தினரும் அப்படியே விட்டுவிட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ராம் மாட்டூ இறந்துகிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.