பூடான் மற்றும் இந்தியாவின் பிரதமர்கள் நேற்று பேச்சு வார்த்தை.! பிரதமர் மோடி பூடான் செல்வதற்கான அழைப்பை ஏற்பு.!

பூடான் மற்றும் இந்தியாவின் பிரதமர்கள் நேற்று பேச்சு வார்த்தை.! பிரதமர் மோடி பூடான் செல்வதற்கான அழைப்பை ஏற்பு.!


Bhutan prime minister met India's Prime minister Narendra modi yesterday

பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே நேற்று இந்தியாவில், நம் தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அவர அந்நாட்டின் பிரதமராக கடந்த பிப்ரவரி மாதம் தான் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Bhutan prime minister

தனது முதல் அரசு முறை வெளிநாட்டு பயணமாக நேற்று இந்தியாவில் உள்ள தலைநகர் டெல்லியை வந்தடைந்தார். டெல்லியில், நம் நாட்டின் குடியரசு தலைவரான திரௌபதி முர்முவை சந்தித்தார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளை குறித்து, இரு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் நாட்டின் போக்குவரத்து, எரிசக்தி, நீர் மின்சக்தி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, மக்களிடம் பரிமாற்றம், மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை குறித்து கலந்துரையாடினர். மேலும் சிறப்பு மற்றும் தனித்துவமான இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.

Bhutan prime minister

பூடான் மக்களின் வளர்ச்சியில் இந்தியா மதிப்புமிக்க பங்காளியாக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தார். அடுத்த வாரம் பூடான் செல்வதற்கான ஷெரிங் டோப்கேயின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுள்ளார். இதனால் வரும் வாரத்தில் பிரதமர் மோடி பூடான் செல்ல இருக்கிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், அவர் பிரதமர் மோடியை தனது மூத்த சகோதரர் என்று குறிப்பிட்டிருந்தார்.