பெரும் அதிர்ச்சி! தீபாவளிக்கு புதிய துப்பாக்கி! அதனால் கண் பாதிப்பு ஏற்பட்டு 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் உற்சாகம் நிரம்பியிருந்த போதும், சில அபாயகரமான புதிய விளையாட்டு பட்டாசுகள் நாடு முழுவதும் கவலைக்குரிய நிலையை உருவாக்கின.
போபாலில் புதிய ரக தீபாவளி துப்பாக்கி பாதிப்பு
மத்திய பிரதேசத்தின் போபாலில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட புதிய ரக தீபாவளி துப்பாக்கி குழந்தைகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதை வெடிக்க வைக்க கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. தண்ணீருடன் கலக்கும்போது உருவாகும் அசிட்டிலின் வாயு பெரும் சத்தத்துடன் வெடிக்கும் தன்மை கொண்டது.
125 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
இந்த துப்பாக்கியைப் பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகள் கண் எரிச்சல் மற்றும் தற்காலிக பார்வை குறைபாடு உள்ளிட்ட உடல் நலப் பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். அவர்கள் தற்போது போபால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவர்களின் கடும் எச்சரிக்கை
“அசிட்டிலின் வாயுவை சுவாசிப்பதால் தலைவலி, மூச்சுத் திணறல், நினைவிழப்பு போன்ற ஆபத்தான விளைவுகள் நேரலாம். இது சாதாரண பட்டாசு அல்ல; ரசாயன வெடிகுண்டு போல செயல்படும்” என கண் மருத்துவர் ஹேமலதா யாதவ் எச்சரித்துள்ளார்.
அதிரடி சோதனையும் பறிமுதல் நடவடிக்கையும்
சம்பவம் சர்ச்சையாக மாறியதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல பட்டாசு விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அதே வகை தீபாவளி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரசாயன ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய அவசியம் அதிகரித்துள்ள நிலையிலும், குழந்தைகள் பாதுகாப்பு முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! இருமல் மருந்து குடித்து 15 நாட்களில் 9 குழந்தைகள் உயிரிழப்பு! தமிழ்நாட்டில் இருமல் மருந்துக்கு தடை..!!!