விரைவில் வாகனங்களுக்கு புதிய வாகன பதிவெண் அறிமுகம்!! முழு விவரம் இதோ!!bh-number-plate-system-update

புதிய வாகன பதிவில் BH(Bharat series)என துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது மீண்டும் பதிவு செய்வதைதவிர்க்க BH பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பணி மற்றும் தொழில் சம்மந்தமாக ஒருவர் ஒருமாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது தங்கள் வாகனங்களை எடுத்துசெல்லும்நிலையில், அந்த வாகனங்களை அவர்கள் செல்லும் மாநிலத்தில் ஓராண்டுக்குள் மறு பதிவு செய்வதுடன், சாலை வரியும் கட்ட வேண்டியுள்ளது.

இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாக புகார் எழுந்ததை அடுத்து, BH என்ற புது நம்பர் பிளேட் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அரசு பணியில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலர்கள், மத்திய மாநில அரசுப் பணியாளர்கள், பொதுத்துறைப் பணியாளர்கள் போன்றோருக்கு இந்த முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.

அதேபோல் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் விருப்பத்தின் பெயரில் இந்தப் பதிவு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புது மாற்றத்தின் மூலம், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது மீண்டும் வாகன பதிவு செய்ய தேவை இல்லை. இந்தப் பதிவின்போது இரண்டாண்டுக்கான சாலை வரி பெறப்படும்.