இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பு!



Bank strike september 11

செப்டம்பர் 11-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். United Forum of Bank Unions (UFBU) அறிவித்துள்ள இந்தப் போராட்டத்தில், 5 நாள் வங்கி வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 11-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, செப்டம்பர் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி கிளைகள் வழக்கம்போல் செயல்படாது. மேலும், செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 11 முதல் 14 வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கி கிளை சேவைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதனால் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை உள்ளிட்ட கிளை சார்ந்த நேரடி வங்கி பணிகளில் தாமதம் ஏற்படலாம். இருப்பினும், வங்கி விடுமுறை மற்றும் வேலைநிறுத்த காலத்திலும் ATM, UPI, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகள் பொதுவாக தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பெண்களின் விடுதி கழிப்பறையில் ரெக்கார்டிங் மோடில் இருந்த ரகசிய மொபைல் போன்! லீக்கான அதிர்ச்சி வீடியோ....!!!

bank strike

வங்கி ஊழியர்களின் 5 நாள் வேலை வார கோரிக்கையுடன், Performance Linked Incentive (PLI) தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் UFBU முன்வைத்துள்ளது. பேச்சுவார்த்தைகளில் உறுதியான தீர்வு கிடைக்காததால், செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும், செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, வங்கி கிளைகளில் நேரடியாக செய்ய வேண்டிய அவசர பணிகள் இருப்பவர்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்வது நல்லது.

இதையும் படிங்க: குழந்தை யாருக்கு பிறந்தது?.. மனைவி மீது சந்தேகம்.. 3 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!