தலைநகரில் உச்சியை பிளக்கும் வெயில்.. 5 வருடத்தில் இல்லாத அளவு கிடுகிடு உயர்வு.. தீயிலிட்ட புழுவாய் தவிக்கும் மக்கள்.!

தலைநகரில் உச்சியை பிளக்கும் வெயில்.. 5 வருடத்தில் இல்லாத அளவு கிடுகிடு உயர்வு.. தீயிலிட்ட புழுவாய் தவிக்கும் மக்கள்.!


Bangalore Summer Season Heat Increased

கடந்த 5 வருடத்தில் இல்லாத அளவு வெயிலின் தாக்கமானது பெங்களூரு நகரில் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருநாளில் சாதாரணமாக வெப்பம் 34.5 டிகிரி செல்ஸியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இவ்வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் நகரமயமாக்கல் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

கர்நாடக மாநிலத்தின் தலைநகராக உள்ள பெங்களூருக்கு பூங்கா நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று பல்வேறு புனைபெயர்கள் உள்ளன. அந்நகரில் உள்ள கப்பன் பூங்கா, லால் பார்க் போன்ற எழில்கொஞ்சும் இயற்கை பூங்காவில் மக்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பது வழக்கம். பெங்களூர் நகரில் வேலைவாய்ப்புகள் அதிகம் என்பதாலும், எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி மையம் என்பதாலும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கு அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். 

அவ்வாறு வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள், அங்குள்ள சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றாற்போல தங்களை தக்கவைக்கின்றனர். அங்கு பெரும்பாலும் குளிர்ந்த சூழல் நிலவுவதால், பல இடங்களில் இயற்கை பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சாலையோரம் உள்ள மரங்கள், தட்டுப்பாடு இல்லாத குடிநீர் போன்றவை மக்களுக்கு பேருதவி செய்கிறது. டெல்லி, சென்னை மற்றும் மும்பையை போலவே மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் பெங்களூருக்கும் இடம் உண்டு. 

bangalore

ஆனால், அங்கு சீதோஷ்ண நிலை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அளவில் இருப்பதால், அங்கு செல்ல பலரும் விரும்புகின்றனர். இந்த நிலையில், காலத்திற்கேற்ப சீதோஷ்ண நிலை மாறி வருவதால், காலத்திற்கேற்ப வெப்பமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதமாகவே பெங்களூர் நகரில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மைய கூற்றுப்படி மார்ச் மாதத்தில் 34.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

கடந்த 5 வருடத்தில் இல்லாத அளவுக்கு பெங்களூர் நகரில் வெயில் பதிவாகியுள்ள நிலையில், மக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாக்க வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். உடல் சூட்டை குறைக்க இயற்கை பழங்கள் மற்றும் பானங்கள் பக்கமும் திரும்பி இருக்கின்றனர். போக்குவரத்து பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நகரின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்துள்ளது.

bangalore

பெங்களூரில் 1 இலட்சம் தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் நிலையில், வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை சுற்றுசூழலை மாசடைய வைக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு மின்சார வாகன பயன்பாடுகளை ஊக்குவித்து வருகிறது. மேலும், அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் சார்ஜிங் நிலையமும் அமைக்கப்பட்டு வருகின்றன.

"மரம் வளர்ப்போம், இயற்கையை உயிராய் பாதுகாப்போம்"