மலரும் மனித நேயம்! தூக்கி வீசப்பட்ட குழந்தைக்கு தாய் பால் புகட்டிய பெண் காவலர்.!bangalor - women constable mother milk in child

பெங்களூருவில் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் புகட்டிய பெண் காவலர் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளார்.

பெங்களூர் எலகங்கா பகுதியில் வசித்து வருபவர் கான்ஸ்டபிள் சங்கீதா எஸ் ஹலிமனி. இவர் வழக்கம்போல் தனது பணிக்கு சென்று கொண்டிருக்கும் வேளையில் அதே பகுதியில் பிறந்து 24 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை கண்டுள்ளார்.

bangalore

கடும் குளிரில், எறும்புகள் கடித்தவாறு அலறி துடித்த அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் விரைந்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் பசியினால் தொடர்ந்து கதறியவாறு இருந்துள்ளது அக்குழந்தை. இந்நிலையில் பெண் காவலர் நான் தாய்ப்பால் கொடுக்கலாமா என்று மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட பிறகு தாய்ப்பால்  கொடுத்துள்ளார்.

குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறும்போது,’ கான்ஸ்டபிள் சங்கீதா சரியான நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்து. நோய்தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சையை விட சங்கீதா கொடுத்த தாய்பால் தான் குழந்தையின் உடல் தேருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.