
Babji game
மத்தியபிரதேசத்தில் இளைஞர் ஒரு பப்ஜி விளையாட்டில் முழ்கியதால் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை குடித்து நொடிப்பொழுதில் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 20 வயதான இளைஞர் சவராப் யாதவ். ஒரு நாள் அந்த இளைஞன் தனது நண்பர்களுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அதில் ஒரு நண்பர் நகைக்கடையில் வேலை செய்து வருபவர்.
அந்த நண்பர் ஒரு வேலைக்காக தங்கத்தை சுத்தம் செய்யும் ஆசிட்டை ஒரு பாட்டிலில் எடுத்து வந்துள்ளார். அனைவரும் ஒன்றாக ரயிலில் பயணம் செய்யும் போது சவராப் யாதவ் தனது மொபைல் போனில் மிகவும் சீரியஸாக பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.
அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. உடனே அவர் தண்ணீர் என நினைத்து விளையாட்டின் மோகத்தால் பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்துள்ளார். அந்த இளைஞன் குடித்து நொடிப்பொழுதில் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
Advertisement
Advertisement