ஆற்றில் ரத்தக்கறையுடன் மிதந்த வந்த 3 சாக்கு மூட்டைகள்! ஆடு மேய்த்தவர்கள் திறந்ததும் கண்ட பேரதிர்ச்சி.... ! 4 நாட்களுக்கு முன்.... விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்...!!!



attappadi-bhavani-river-body-parts-recovered

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் மூன்று சாக்கு மூட்டைகளில் இருந்து இளம்பெண் மற்றும் 5 வயது சிறுமியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. சீரக்கடவு படித்துறை பகுதியில் மிதந்து வந்த மூட்டைகளை ஆடு மேய்த்த தொழிலாளர்கள் கரைக்கு எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த புதூர் போலீசார் அங்கு சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சாக்கு மூட்டைகளில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

சீரக்கடவு படித்துறை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூன்று சாக்கு மூட்டைகள் ஆற்றில் மிதந்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவற்றை கரைக்கு கொண்டு வந்து திறந்து பார்த்தபோது, ஒரு பெண்ணின் தலையும், ஒரு சிறுமியின் தலையும் கிடந்தன. மேலும், அழுகிய நிலையில் உடல் பாகங்களும் இருந்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கண்ணெதிரே கருகிய பருத்திப் பயிர்! கடன் சுமையால் உண்டான மன உளைச்சல்... வயலிலே பருத்தியோடு தன் உயிரையும் மாய்த்த விவசாயி! நெஞ்சை உலுக்கும் சோகம்....!!!

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூட்டைகளை கைப்பற்றினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 5 வயது சிறுமியும் என தெரியவந்துள்ளது.

4 நாட்களுக்கு முன்பு கொலை நடந்திருக்கலாம்

இருவரும் கொலை செய்யப்பட்டு சுமார் 4 நாட்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மீட்கப்பட்ட உடல் பாகங்கள் பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக ஆய்வுக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இளம்பெண்ணையும் சிறுமியையும் கொலை செய்து, உடல்களை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைகளில் அடைத்து பவானி ஆற்றில் வீசியிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். கொலை நடந்த இடம் எது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவையில் இருந்து வந்த சாக்கு மூட்டைகள்; 

விசாரணையில் மற்றொரு முக்கிய தகவலும் கிடைத்துள்ளது. உடல் பாகங்கள் இருந்த சாக்கு மூட்டைகள் கோவையில் இருந்து அட்டப்பாடி கோட்டத்தரா பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மளிகைப் பொருட்கள் அனுப்ப பயன்படுத்தப்பட்டவை என தெரியவந்துள்ளது. இதனால் உடல்களை கோவையில் இருந்து கொண்டு வந்து ஆற்றில் வீசியிருக்கலாமா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அட்டப்பாடி கொலை வழக்கு தொடர்பாக உயிரிழந்தவர்கள் யார், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அக்காவை ஆசையாக அழைக்க சென்ற சிறுவனை.... அடுத்த நொடி எமன் கூட்டிட்டு போயிட்டு! கண்கலங்க வைக்கும் காட்சி...!!!