
aswin in new team
ஐ.பி.எல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தற்போது இருந்தே பல அணிகள் தங்கள் அணி வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கடந்த 2 வருடங்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். அந்த அணி 2018-ம் ஆண்டு 7-வது இடத்தையும், கடந்த வருடம் 6-வது இடத்தையும் பிடித்தது. இதனால் புதிய கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்க பஞ்சாப் அணி முடிவு செய்தது. மேலும் டெல்லி அணி அஸ்வினை வாங்குவதாகவும் பேச்சு அடிபட்டது.
கடந்த இரண்டு சீசனில் பஞ்சாப் அணியை தலைவராக வழிநடத்திய அஸ்வின், ஆரம்பத்தில் அணியை சிறப்பாக வழிநதிவந்தார். இந்நிலையில், அஸ்வினை டெல்லி அணியிடம் மாற்றி விட்டு அவர்களிடம் இருக்கும் இரண்டு வீரர்களை வாங்க பஞ்சாப் அணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில், மூத்த அதிகாரி கூறுகையில், அஸ்வின் டெல்லி அணியில் இணையவுள்ளார், அஸ்வினுக்கு பதில் இரண்டு வீரர்களை டெல்லி அணி கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், அஸ்வின் டெல்லி அணியில இணையவுள்ளது 99 சதவீதம் முடிந்தது என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement