கொரோனா நாயகன் சோனு சூத் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..! அவரே வெளியிட்ட உருக்கமான தகவல் - TamilSpark
TamilSpark Logo
இந்தியா சினிமா

கொரோனா நாயகன் சோனு சூத் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..! அவரே வெளியிட்ட உருக்கமான தகவல்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் மிகவும் பிரபலமானார் பாலிவுட் நடிகர் சோனு சூத். அவருடைய பிறந்தநாளான நேற்று ஜூலை 30 அன்று தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சோக நிகழ்வை தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் மும்பை நகரில் தன்னுடைய முதல் பிறந்தநாள் மிகவும் சோக மயமானதாக இருந்ததாக கூறியுள்ளார். 1998 ஆம் ஜூலை 25 ஆம் தேதி முதல்முதலாக அவர் தனியாக சினிமா வாய்ப்பு தேடி மும்பைக்கு வந்துள்ளார்.

அடுத்த 4 நாட்களிலேயே அவருக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அந்த சமயத்தில் அவருக்கு மும்பையில் எந்த நண்பர்களும் இல்லையாம். பிறந்தநாளன்று நள்ளிரவில் தனியாக ஒரு பாலத்தில் அமர்ந்துள்ளார்.

இரவில் வீட்டிலிருந்து அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மட்டும் கால் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நேரில் வாழ்த்து சொல்ல யாருமே இல்லையே எனவும் மிகவும் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டுள்ளார் சோனு சூத்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo