பெண்கள் மீது கை வைத்தால் சுட்டுடும்! கற்பழிப்பில் இருந்து பெண்களை காப்பாற்ற வந்துவிட்டது ஆன்டி ரேப் கன்!

பெண்கள் மீது கை வைத்தால் சுட்டுடும்! கற்பழிப்பில் இருந்து பெண்களை காப்பாற்ற வந்துவிட்டது ஆன்டி ரேப் கன்!


anti-rape-gun

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆபத்துக்காலங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆண்டி ரேப் கன் என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளார்  உ.பி மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த ஷியாம் சவுராசியா என்பவர்.

ஆபத்து சமயத்தில், சின்ன பர்ஸ் போன்ற இந்த அமைப்பில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினாள் நீங்கள் இருக்கும் லொகேஷன் குறித்த தகவல் அருகில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்படும்.

Anti rape gun

ஆபத்து தீவிரமாக இருந்தால், அந்த பர்சில் இருக்கும் மற்றொரு பட்டனை அழுத்தினாள் அதிலிருந்து வெளியேறும் பயங்கரமான சத்தம் அருகில் உள்ளவர்களைக் கவனிக்கச் செய்யும், மேலும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த நினைப்பவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

இந்த சத்தத்தால் உயிர் சேதமோ, காயமோ ஏற்படாது எனவும் ஷியாம் சவுராசியா தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே இரும்பிலான பாதுகாப்பு உடைகளை இந்திய ராணுவ வீரர்களுக்காக தயாரித்து இந்திய அளவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.