
Anthira
தெலுங்கான மாநிலத்தில் பெயர் குறிப்பிடப் படாத ஒரு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ளது. அதே பள்ளியில் மாணவர்களுக்கான விடுதி வசதியும் உள்ளது.
ஆனால் அந்த விடுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் லாரி மூலம் தண்ணீர் வாங்கி உள்ளனர். வாங்கிய இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் திறந்து விடுவதுமாக இருந்து வந்துள்ளது. இந்த தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் மாணவிகளின் முடி அதிகமாக இருப்பது தான் என தலைமையாசிரியர் எண்ணியுள்ளார்.
உடனே தலைமையாசிரியர் விடுதியில் தங்கிய 108 மாணவிகளின் தலை முடியையும் வெட்ட உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் அடிப்படையில் தலைமுடிகளும் வெட்ட பட்டன.
இதனை அடுத்து வார இறுதியில் பிள்ளைகளை காண வந்த பெற்றோருக்கு முடியின்றி காணும் பிள்ளையை பார்த்தது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெற்றோர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement