கல்லூரி விடுதியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை.. தோழிகள் முன் துடிதுடித்து பறிபோன உயிர்.!

கல்லூரி விடுதியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை.. தோழிகள் முன் துடிதுடித்து பறிபோன உயிர்.!


Andra Pradesh Tirupati Private College Girl Student Suicide

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கடப்பாவை சார்ந்தவர் வசந்தி (வயது 20). இவர் திருப்பதியில் உள்ள சந்திரகிரி மண்டலம், சீனிவாசமங்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், பி.டெக் 2 ஆம் வருடம் பயின்று வந்துள்ளார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து மாணவி வசந்தி பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் கல்லூரியின் மாடிக்கு சென்ற வசந்தி, திடீரென கீழே குதித்துள்ளார். இதனால் அவரின் மண்டை உடைந்து இரத்தம் வெளியேறி, வலியால் அலறித்துடித்துள்ளார். 

Andra Pradesh

விடுதியில் இருந்த சக மாணவிகள், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வசந்தி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து ரங்கம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வசந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.