அக்கா-தங்கை என 2 சிறுமிகள் தாயின் இரண்டாவது கணவனால் பலாத்காரம்; குழந்தை பெற்றுக்கொடுக்க வற்புறுத்தி நடந்த பயங்கரம்.!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஏழூர் மாவட்டம், வட்லூர் பகுதியில் 30 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவரின் கணவர் கடந்த 2007ல் உயிரிழந்துவிட, தனது தாய்மாமா சதீஷ்குமார் (வயது 43) என்பவரை இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் 30 வயது பெண்மணி தனது 2 மகள்களை விசாகப்பட்டினத்தில் இருக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். முதல் கணவரின் 2 குழந்தைகளுக்கு பின் பெண்மணி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், இரண்டாவது கணவர் சதீஷ் தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம்பிடிக்க, குழந்தைக்காக மற்றொரு திருமணமும் செய்வேன் என மிரட்டியுள்ளார். இதனால் பெண்மணி வேறு யாரையும் திருமணம் செய்ய வேண்டாம்.
எனது மகள் மூலமாகவே குழந்தையை பெற்றுக்கொள் என கூறவே, 8ம் வகுப்பு பயின்று வரும் 14 வயது மகளை 30 வயது பெண்மணி சதிஷிடம் ஒப்படைத்து இருக்கிறார். சதிஷ் சிறுமியின் எதிர்ப்பையும் மீறி பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி பின்னாட்களில் கர்ப்பமாகிவிட, இவ்விவகாரம் வெளியே தெரிந்தால் அவதூறாக பேசுவார்கள் என்று எண்ணிய தாய் கருக்கலைப்பு செய்ய மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார். இதனிடையே, சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார்.
14 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததும், எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என கூறி இருக்கிறார். இதனால் தாய் தனது இரண்டாவது மகளை அழைத்து வந்து சதீஷிடம் ஒப்படைக்க, அவர் அந்த சிறுமியையும் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் நடக்க, கருவிலேயே குழந்தை இறந்த காரணத்தால் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனால் குழந்தையின் உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது. இதனால் சதீஷ் - இளம்பெண் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதால் இளம்பெண் விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி, சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில் இளம்பெண்ணின் மூத்த மகள் 3 மாத கர்ப்பமாக இருப்பது உறுதியாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சதீஷ் குமாரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டார். சிறுமிகள் இருவரும் வாழ்க்கை புரியாமல், ஆதரவாய் இருந்த தாயையும் இழந்து தவித்து வருகின்றனர்.