
Andra MP come as a kalaingar karunanithi
தெலுங்குதேச எம்பி நரமல்லி சிவபிரசாத் செய்த செயலால், மறைந்த கருணாநிதியே நாடாளுமன்றத்துக்கு வந்ததுபோல் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். நாடாளுமன்ற வளாகத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேடத்தில் வந்த எம்.பி. சிவப்பிரசாத் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
குறிப்பாக எம்.பி. சிவப்பிரசாத் விதவிதமான வேடங்கள் அணிந்து வந்து நாடாளுமன்ற வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார். நாரதமுனி, பள்ளி மாணவர், ஹிட்லர் என இவரின் வேடங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. விதவிதமான வேடங்கள் மூலம் மக்கள் மற்றும் அரசின் கவனத்தை பெற்று தங்கள் கோரிக்கையை முன்வைப்பதே இவரது வழக்கம்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று சிவபிரசாத் புது கெட்டப்பில் நாடாளுமன்றத்திற்கு வந்தார். மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவபிரசாத் மறைந்த கருணாநிதி கெட்-அப்பில் நேற்று அவைக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேடத்தில் வந்த சிவப்பிரசாத் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மஞ்சள் துண்டு, சக்கர நாற்காலி, கருப்பு கண்ணாடி என அப்படியே கருணாநிதியை நினைவு கூறும் விதமாக நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த சிவப்பிரசாத், சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு கையசைத்துக்கொண்டு போனார்.
Advertisement
Advertisement