கடைசி நேரத்தில் மணப்பெண் அனுப்பின மெசேஜ்! சாரி... உன்னை கல்யாணம் செஞ்சா... பதறி துடித்த மாப்பிள்ளை குடும்பத்தார்…! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!!



andhra-woman-marriage-fraud-kadapa

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் திருமண நாளில் மணப்பெண் மண்டபத்துக்கு வராமல் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்காக மாப்பிள்ளை வீட்டார் பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் மணப்பெண் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புலிவெந்துலாவில் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் பெண் ஒருவர், வேம்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்ய சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரசாத்தின் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டனர். பந்தல் அமைத்து, உறவினர்கள் மற்றும் ஊரினருக்கு விருந்து ஏற்பாடு செய்ததுடன், சுமார் ரூ.1.5 லட்சத்திற்கு துணிகளும் வாங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: தலைமை ஆசிரியை கொடூர கொலை.. மாணவர்கள் அரங்கேற்றிய வெறிச்செயல்.. காரணம் என்ன? 

முகூர்த்த நேரத்தில் வராத மணப்பெண்

திருமண முகூர்த்த நாள் வந்ததும் மண்டபத்தில் மணமகன் மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். ஆனால், மணப்பெண் மட்டும் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த பிரசாத்தின் குடும்பத்தினர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றனர். அப்போது, “உன்னைத் திருமணம் செய்து கொண்டால் என் அம்மா இறந்துவிடுவார், சாரி” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார்.

ரூ.10 லட்சம் செலவு செய்ததாக புகார்

மணப்பெண் வராததால் அதிர்ச்சியடைந்த பிரசாத், திருமண ஏற்பாடுகளுக்காக சுமார் ரூ.10 லட்சம் வரை செலவு செய்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

ஏற்கனவே இருவரை ஏமாற்றியதாக தகவல்

விசாரணையில், அந்தப் பெண் ஏற்கனவே இரண்டு பேரை இதேபோன்று திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து பணம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இது திட்டமிட்ட திருமண மோசடியா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண்ணின் முந்தைய திருமணங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மணமகன் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண்ணின் பின்னணி மற்றும் இதற்கு பின்னால் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: என்ன மனுஷன் நீ ? காதலனின் உயிரைக் காப்பாற்ற கிட்னியே கொடுத்த காதலி! பதிலுக்கு காதலிக்கு கிடைத்த பேரதிர்ச்சி... கொடூர சம்பவம்!!!