இந்தியா

வீடியோ: ஒரு நொடிதான்!! தண்டவாளத்தில் சிக்க இருந்த பெண்!! கடவுளாக வந்து காப்பாற்றிய ரயில்வே போலீஸ்!!

Summary:

ரயில் தண்டவாளத்தில் சிக்க இருந்த பெண்ணை ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்த

ரயில் தண்டவாளத்தில் சிக்க இருந்த பெண்ணை ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரயிலில் பயணம் செய்த தம்பதியினர் ஒருவர் திருப்பதி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய நிலையில், தூக்கம் காரணமாக இறங்க வேண்டிய ரயில் நிலையத்தில் இறங்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க முடிவு செய்த அவர்கள், அதற்காக தயாராக காத்திருந்துள்ளனர்.

ஆனால் அடுத்த ரயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லாததால் ரயில் நிற்காமல் சென்றுள்ளது. அதேநேரம் ரயில் சற்று மெதுவாக சென்றதால் அந்த தம்பதியினர் ரயிலில் இருந்து இறங்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து ரயிலில் இருந்து கணவர் கீழே இறங்கிவிட்டநிலையில், அவரது மனைவி கீழே இறங்க முயற்சித்துள்ளார்.

அப்போது கால் தடுமாறி கீழே விழுந்த நிலையில் அவர் ரயில் தண்டவாளத்திற்குள் இழுக்கப்பட்டார். ஆனால் அவரது நல்ல நேரம், அதே இடத்தில் ரயில்வே காவலர் ஒருவர் நின்றுகொண்டிருந்தநிலையில், ரயில் தண்டவாளத்திற்குள் சிக்க இருந்த அந்த பெண்ணை உடனடியாக வெளியே இழுத்து ரயிலுக்கு அடியில் சிக்காமல் காப்பாற்றினார்.

சிறிது தாமத்திருந்தாலும் அந்த பெண் ரயிலில் சிக்கி பெரிய விபத்து நடந்திருக்க கூடும். சரியான நேரத்தில் அந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் சதிஷ் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


Advertisement