இந்தியா சினிமா

வெள்ளத்தால் உருகுலைந்துபோன அசாம்.! நிவாரண நிதி அளித்த பிரபல முன்னணி நடிகர்!! எவ்வளவு தெரியுமா?

Summary:

amithab bachan donate flood refund to assam

அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ஆங்காங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் மக்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை அசாம் மாநிலத்தில் 64 பேரும், பீகாரில் 102 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல லட்சக்கணக்கான பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து பெருமளவில் தவித்து வருகின்றனர்.மேலும்  பல இடங்களில் மக்கள் உணவு, உடைகள் இல்லாமல் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் தற்போதும் திண்டாடி வருகின்றனர்.

assam flood க்கான பட முடிவு

இந்நிலையில் உலக அளவில் புகழடைந்த காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வன உயிர்கள் உயிரிழந்தது. மேலும் பல விலங்குகள் வெள்ளத்தில் வேறு இடங்களுக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என என்று அசாம் மாநில அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில்  நடிகர் அக்‌ஷய்குமார் அசாம் வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் .

amitabh bachchan க்கான பட முடிவு

அதனைத்தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் அசாம் முதல்-மந்திரியிடம் நிவாரண நிதிக்கு ரூ.51 லட்சம் வழங்கியுள்ளார். இதற்காக  அசாம் முதல்-மந்திரி சர்பானந்த சோனாவால் அமிதாப்பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 


 


Advertisement