அடேங்கப்பா... பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
அலேக்கா வந்து ஏடிஎம் மிஷினை தூக்கி சென்ற பலே கொள்ளையர்கள்... ராஜஸ்தானில் பரபரப்பு..!
அலேக்கா வந்து ஏடிஎம் மிஷினை தூக்கி சென்ற பலே கொள்ளையர்கள்... ராஜஸ்தானில் பரபரப்பு..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் ஒரே நாளில் 2 ஏடிஎம் இயந்திரங்களை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜ்மீர் மாவட்டம் அரைன் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஒரு வாகனத்தைக் கொண்டு வந்து ஏடிஎம் இயந்திரத்தின் மீது கட்டி இழுத்து அடியோடு பெயர்த்து கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இதேபோன்று ரூபங்கர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தையும் கொள்ளையர்கள் அடியோடு பெயர்த்து கொண்டு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரங்களில் திருடப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு 38 லட்சம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இரு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.