இந்தியா

தேர்வறையில் திடீரென கேட்ட முனகல் சத்தம்! அடிக்கடி வருதே! என்னனு விசாரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

கல்லூரி தேர்வறையில் மாணவர்கள் எந்திரன் படத்தில் வரும் காட்சியை போல் காப்பி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி தேர்வறையில் மாணவர்கள் எந்திரன் படத்தில் வரும் காட்சியை போல் காப்பி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா பல்கலைக் கழகத்தின் காந்தாரி வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் மருத்துவ மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வு நடைபெறுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த அறையில் இருந்து அவ்வப்போது திடீர் திடீர் என முனகல் சத்தம் கேட்டுள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தேர்வு கண்காணிப்பாளர் உடனே அங்கிருந்த மாணவர்களை தீவிரமாக நோட்டமிட ஆரம்பித்துள்ளார். அப்போது சில மாணவர்கள் அடிக்கடி தங்கள் நெஞ்சு பகுதியில் கைவைத்து அழுத்துவதை பார்த்த தேர்வறை கண்காணிப்பாளர் இதுகுறித்து அந்த மாணவர்களிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த மாணவர்கள் அனைவரும் சொல்லிவைத்ததுபோல் ஒரே மாதிரி பதிலளித்துள்ளனர். அது தங்களது மதச் சின்னம் என்றும், அதை யாருக்கும் காட்டக் கூடாது எனக் கூறியுள்ளனர். இதனை கேட்டு சந்தேகமடைந்த தேர்வறை கண்காணிப்பாளர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து கூறிய, குறிப்பிட்ட 10 மாணவர்களை தனியாக அழைத்துச்சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையின்போது மாணவர்கள் அனைவரும் சிம்கார்டுடன், ப்ளூடூத் இணைக்கப்பட்ட இயர்ஃபோன்களை பயன்படுத்தி, எந்திரன் படத்தில் ரோபோ சொல்லிக்கொடுப்பதுபோல் வெளியில் இருந்து யாரோ சொல்லிக்கொடுக்க, இவர்கள் அதை கேட்டு தேர்வு எழுதியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகம் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement