ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும்.? பொதுமக்கள் என்ன செய்யவேண்டும்.?

after april 14 situation


after april 14 situation

கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. சமீபத்தில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி சமீபத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது, ஊரடங்கு காலம் முடிந்தபின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் பிரதமர் தெரிவித்தார். 

144

ஊரடங்குக்குப்பின் சமூக விலகல் நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா பாதிப்பு குறித்து, மாவட்ட அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், வைரஸ் அதிகம் பரவும் இடங்களை கண்டறிவதும் அவசியம் எனவும் பிரதமர் மோடி அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் வைரஸ் பரவல் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கை பொதுமக்கள் மதித்து அதற்க்கு ஏற்றாற்போல் செயல்பட்டால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். 

சுகாதாரத்துறையினர் மற்றும் கொரோனவை கட்டுப்படுத்தும் துறையில் உள்ள அணைத்து பணியாளர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேசத்திற்காக அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சமூக விலகலை கடைபிடிப்போம்.