சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அட்ரா மேலத்த..! திருமண வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்த மகளை மேலதாளத்தோடு தன் வீட்டிற்கு அழைத்து சென்ற தந்தை!!
ஜார்க்கண்ட் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனது மகள் சாக்க்ஷிக்கு சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் பல கனவுகளோடு சாக்க்ஷி தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் சற்றும் எதிர் பாராத விதமாக பல பிரச்சினைகளை மட்டுமே சந்தித்து வந்துள்ளார்.
மேலும் சாக்க்ஷி அவரது கணவர் மற்றும் உறவினர்களால் பல கொடுமைகளுக்கு ஆளானார். இதனால் மனமுடைந்த சாக்க்ஷி இனியும் தன்னால் இந்த கொடுமைகளை தாங்கி கொண்டு இங்கு வாழ முடியாது எனவே தந்தை வீட்டிற்கே சென்றுவிடலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து தன் தந்தையிடம் சாக்க்ஷி தனது கணவர் வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி தெரிவித்துள்ளார்.
இதனால் சாக்க்ஷியின் தந்தை தன் மகளை தன் வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பிரேம்குமார் தனது மகளுக்கு திருமணம் செய்தபோது எப்படி மேலதாளத்தோடு அனுப்பி வைத்தாரோ அது போலவே இப்போது மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து வரும்போது மேலதாளத்தோடு அழைத்து வந்துள்ளார். மேலும் திருமண வாழ்கையை விட்டு விலக முடிவு செய்த மகளை மேலதாளத்தோடு தன் வீட்டிற்கு அழைத்து செல்லும் தந்தையின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.