இந்தியா

போலீசாரால் சரமாரியாக தாக்கபட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.! அதிர்ச்சி காரணம்.!

Summary:

AAP MLA attacked by police

உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் கொடூரமான நபர்களால் 19 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கொடூர சம்பவத்தில் அப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கியும், உடலின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் டெல்லியில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ அஜய் தத், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை ஒரு அறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று டெல்லி காவல்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

சப்தர்ஜங் மருத்துவமனையில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின்  எம்எல்ஏ அஜய் தத் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின்  எம்எல்ஏ அஜய் தத் கூறுகையில் காவலர்கள் என் காலரை பிடித்து இழுத்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள், அங்கே நான் அதிகாரிகளால் தாக்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement