ஆதார் - பான் இன்னும் இணைக்கவில்லையா?.. அடுத்த ஆப்பு உங்களுக்குத்தான்..! உயருகிறது அபராதம்..!!Aadhar pan card join fine

தனிமனிதனின் அடையாளமான ஆதாரையும், வருமானவரி தொடர்பான நிரந்தர கணக்கு எண் பான்கார்டையும் இணைக்க மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. 

இதற்கான காலநீட்டிப்பு அவகாசமும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் ரூ.1000 அபராதத்துடன் ஆதார் - பான் இணைக்க அவகாசம் வழங்கப்பட்டது.

Central Government

அதற்கு முன்பு இலவசமாக இணைத்துக்கொள்ள காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவை பலன் பெறாததால் ரூ.1000 அபராதம் என்று உத்தரவிடப்பட்டது. 

ஆதார் - பான் இணைப்புக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போதும் பலரும் இணைக்காததால் இனி மேலும் அபராதம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.