பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு... பாஜக நிர்வாகியின் முகத்திரையை கிழித்த இளம் பெண்...!

பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு... பாஜக நிர்வாகியின் முகத்திரையை கிழித்த இளம் பெண்...!



A young woman who posted a live video on Facebook and tore off a BJP executive's veil.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி. லைவ் வீடியோ வெளியிட்ட பென்ணால் பதவி பறிபோனது.

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக். இவர் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிர்மலா யாதவ் (32) என்ற பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அந்த பாஜக நிர்வாகி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் முகநூல் பக்கத்தில் உள்ள லைவ் வீடியோ மூலமாக பேசியுள்ளார். கட்டிலில் அரைகுறை அடையுடன் ஸ்ரீகாந்த் தேஷ்முக் இருக்க அந்தப் பெண் அழுது கொண்டு வீடியோவில் பேசுகிறார். உடனே ஸ்ரீகாந்த் எழுந்து ஓடி வந்து செல்போனை தட்டி விட்டு கோபமாக சத்தம் போடுகிறார். 

இந்த வீடியோ வைரலாகி மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து ஸ்ரீகாந்த் தேஷ்முக் பாஜக மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நிர்மலா யாதவிற்கும் தனக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது என்றும், அந்தப் பெண் தன்னை மிரட்டி பணம்பறிக்க முயற்சி செய்கிறார் என்று, காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் புகார் அளித்துள்ளார்.  

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில பாஜக துணை தலைவர் சித்ரா வாக், ஸ்ரீகாந்த் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானதும் அவரை பதவியில் இருந்து விலக சொன்னதால் அவரும் ராஜினாமா செய்து விட்டார். கட்சியிலிருந்தும், பதவியிலிருந்நும் நீக்கப்பட்டு இருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த பெண் நேரில் வந்து புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.