திருமணத்திற்கு மசியாத இளம் பெண்: ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்!.. வாலிபரின் வீட்டில் கை வைத்த மாவட்ட நிர்வாகம்..!!A young man was arrested for brutally assaulting the girl after she refused to marry him

திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைதுசெய்யப்பட்டார். 

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மௌகஞ்ச்சில் வசித்து வருபவர் பங்கஜ் திரிபாதி அதே பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்ள சொல்லி பங்கஜ் வற்புறுத்தியுள்ளார். இதை அந்த பெண் மறுத்துள்ளார். எனவே அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார் பங்கஜ் திரிபாதி. தாக்கும் போது அவரது நண்பர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கபட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  தலைமறைவாக இருந்த பங்கஜ் திரிபாதியை கைது செய்தனர். இந்நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக் கொள்ளமுடியாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும்  கைது செய்யப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன் அவரது வீட்டையும் மாவட்ட நிர்வாகம் இடித்துத்தள்ளியதாக தெரிவித்துள்ளார்.

பங்கஜ்ஜின் வீடு அரசு நிலத்தை ஆக்ரமித்திருந்ததால்  இடிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்ட்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளானர். மேலும் தாக்குதல் வீடீயோ வெளியிட்ட பங்கஜின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.