இந்தியா

குஜராத் பூங்காவில் திடீரென தோன்றிய மர்ம உலோகத்தூண்.! ஏலியனா? மனித செயலா? ஆச்சர்யத்தில் மக்கள்.!

Summary:

ர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகின் பல நாடுகளில் மர்ம உலோகத் தூண் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்தநிலையில், இந்தியாவிலும் ஒரு இடத்தில் மர்ம உலோகத் தூண் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூணை தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றிய ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆன 6 அடி உயரம் கொண்ட தூண் தென்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற மர்ம உலோகத் தூண் தென்பட்டது இதுவே முதல் தடவையாகும். அகமதாபாத்தில் உள்ள ஒரு பூங்காவில் இந்த  அமைப்பு காணப்பட்டுள்ளது. உலோக அமைப்பு தரையில் அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது, ஆனால் அதன் அடிவாரத்தில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. 

இந்த தூணை நிறுவுவது மனிதர்கள் தான் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் பூங்காவில் பணிபுரியும் ஒருவர், மாலையில் வீட்டிற்குச் சென்றபோது, அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் வேலைக்குத் திரும்பியபோது, அந்த அமைப்பு இருந்ததாக கூறுகிறார். இதனால் அந்த பூங்காவுக்கு மக்கள் கூட்டமாக சென்று அதனை பார்த்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் பல நாடுகளில் இது நிஜமாகவே ஏலியன் வேலையாக இருக்குமோ என அச்சப்பட்டவர்கள் கூட தற்போது வேலையில்லாதவர்கள் யாரோ இதனை நட்டுவைக்கிறார்கள் எனக் கடந்து செல்ல துவங்கிவிட்டனர். இந்தநிலையில் இந்தியாவிலும் இந்த மர்ம உலோகத் தூண் திடீரெனத் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement