அடக்கடவுளே.. பச்ச குழந்தை மீது ஏறி நின்று ஆசி வழங்கிய சாமியார்; அதிர்ச்சி வீடியோ வைரல்.! இப்படியுமா இருப்பாங்க?..!a Preacher Bless Child Land on baby Body 

 

இந்தியாவில் இன்றளவிலும் சாமியார்களின் பேச்சை கண்மூடித்தனமாக கேட்டு செயல்படும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களால் பல அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன. 

குழந்தைகளும்-தெய்வங்களும் ஒன்று என்பது சான்றோர் வாக்கு. ஆனால், குழந்தைகளுக்கு ஆசி வழங்குகிறோம் என சில கோவில்களில் நடைபெறும் சடங்குகள் காண்போரை அதிர்ச்சியுற வைத்துள்ளன.

வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் காணொளியில், குழந்தையை கடவுள் முன்பு வைத்துள்ள சாமியார் அதன் மீது ஏறி ஆசி வழங்குவது போல கொடுமை செய்கிறார். பார்க்கவே பதறவைக்கும் வீடியோ பலரின் கண்டனத்தை பெற்று வருகிறது.