யார் சார் இவரு?? தலைகீழாக நின்றபடி Wide கொடுத்த நடுவர் - இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!

யார் சார் இவரு?? தலைகீழாக நின்றபடி Wide கொடுத்த நடுவர் - இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!


a-different-style-of-umpiring-viral-video

கிரிக்கெட் போட்டியில் நடுவர் ஒருவர் தலைகீழாக நின்று Wide கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சமூக வலைத்தளங்களில் பலவிதமான வேடிக்கையான வீடியோக்கள், சம்பவங்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் நடுவர் ஒருவர் செய்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகிவருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், பந்துவீச்சாளர் வீசிய பந்து அகல பந்தாக சென்றதை அடுத்து, அந்த போட்டியின் நடுவர் அந்த பந்தை அகல பந்தாக தெரிவிக்க, தலைகீழாக நின்றபடி Wide என அறிவித்து இருக்கிறார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.