மாப்பிள்ளை ஊர்வலத்தில் வாரி இறைக்கப்பட்ட ரூ.90 லட்சம் பண மழை! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

மாப்பிள்ளை ஊர்வலத்தில் வாரி இறைக்கப்பட்ட ரூ.90 லட்சம் பண மழை!


குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலத்தில் மணமகனின் குடும்பத்தினர் ரூ.90 லட்சத்தை பண மழையாக வாரி இறைத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷிராஜ்சிங் ஜடேஜா என்பவரின் திருமணம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அன்றையதினம் மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்கியதும் ரூ. 90 லட்சம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலத்தின் சேலா பகுதியின் முக்கிய சாலையில் மாப்பிள்ளை ஊரவலமாக அழைத்துச் செல்லப்பட்ட போது திடீரென பண மழை கொட்டியது. மாப்பிள்ளையின் குடும்பத்தினரும், நண்பர்களும் பணத்தை வாரி இறைத்தனர். 

பண மழையில் நனைந்த மணமக்கள் ஊர்வலத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம், கண்ட் என்ற கிராமத்துக்கு சென்றனர். மாப்பிள்ளையின் அண்ணன் மணமக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான காரையும் பரிசளித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo