பச்சமண்ணைப்போயி.. 9 வயது சிறுமி கோவிலுக்குள் பலாத்காரம்., பூசாரியின் வெறிச்செயல்.. தெய்வங்களின் தேசத்தில் காம பூசாரி..!

பச்சமண்ணைப்போயி.. 9 வயது சிறுமி கோவிலுக்குள் பலாத்காரம்., பூசாரியின் வெறிச்செயல்.. தெய்வங்களின் தேசத்தில் காம பூசாரி..!


9 years old girl harassment by priest

9 வயது சிறுமியை கோவிலுக்குள் அழைத்து பாலியல் தொல்லையளித்த கோவில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அடுத்த வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த விபின் என்ற 32 வயது நபர் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஒரு மாதமாக வல்லகடவு பகுதியில் தங்கி கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி சாமி தரிசனம் செய்வதற்காக தனியே வந்துள்ளார். இதனை கண்ட பூசாரி சிறுமியை கோவிலுக்குள் அழைத்து, பூஜை பொருள் வைக்கும் அறைக்கு கூட்டி சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

KERALA

இதனால் வலியால் அலறிதுடித்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் பூசாரியின் இந்த செயல் குறித்து வண்டிப்பெரியாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் கோவில் பூசாரி விபினை அழைத்து விசாரணை செய்ததில், அவர் தனது தவறை ஒப்புகொண்டதால் போக்சோ சட்டத்தில் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து பீருமேடு கிளை சிறையில் அடைத்துள்ளனர்.