இந்தியா

4 தாத்தாக்கள், 2 சிறுவர்கள்... உதவிகேட்டு சென்ற 8வயது பிஞ்சுக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்! கொந்தளிக்க வைக்கும் பகீர் சம்பவம்!

Summary:

8year chils sexually abused by 6persion

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் கூலித் தொழிலாளிகள் பலரும் வேலை, வருமானமின்றி பெருமளவில் தவித்து வருகின்றனர் இது ஒருபுறமிருக்க ஊரடங்கிலும்  நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் தந்தைக்கு வேலை இல்லாத நிலையில் குடும்பம் வறுமையில் இருந்து வந்துள்ளது. 

அதனால் அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று உதவி கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு உதவுவதாக கூறி சிறுவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து அழுதவாறே சிறுமி அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதனை ஆடியோவாக பேசவைத்து அதன் மூலம் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பிறகு 50 வயதுக்கு மேற்பட்ட 4 தாத்தாக்கள், 15 வயதுக்குட்பட்ட இரு சிறுவர்களை  கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Advertisement