இந்தியா சமூகம்

டெல்லியில் கிரிக்கெட் தகராறில் 8 வயது சிறுவன் அடித்துக்கொலை! குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் வலை வீச்சு

Summary:

8 year old boy dead in a cricket fight

டெல்லியில் மதரசா தாஸ் உல் உலூம் பாரிடியா குழுமத்தில் படித்து வந்த 8 வயது அந்த பகுதி இளைஞர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மால்வியா நகரில் உள்ள மதரசா நிறுவனத்தில் ஹரியானாவை சேர்ந்த முகமது அசீம் என்ற எட்டு வயது மாணவன் தங்கி படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் மதரசா பள்ளி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் படுகாயமடைந்த முகமது அசீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தொடர்புடைய படம்

இந்த சம்பவம் பற்றி போலீசார் தெரிவிக்கையில், மதரஸா பள்ளி அருகே ஒரு காலியான இடம் இருப்பதாகவும் அந்த இடத்தில் மதரஸா பள்ளி மாணவர்களும் அந்த பகுதியை சேர்ந்த மற்ற இளைஞர்களும் அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். அன்று இந்த இரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மதரஸா பள்ளி மாணவர்கள் மீது மது பாட்டில்களையும் கட்டைகளையும் வீசியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் முகமது அசீம் பலமாக காயமடைந்து கீழே விழுந்துள்ளார். அடிபட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.


Advertisement