துடிதுடிக்க உயிர் இழந்த 77 பச்சிளம் குழந்தைகள்! நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்!



77-infants-died-in-24-days-at-rajasthan-hospital

ராஜஸ்தான் மாநிலத்தில் இயங்கி வரும் பெரிய அரசு மருத்துவமனை ஒன்றில் 24 நாட்களில் 77 பச்சிளம் குழந்தைகள் பிறந்த உடன் மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் இயங்கிவரும் ஜே. கே. லோன் அரசு மருத்துவமனையில் சமீப காலமாக குழந்தைகள் பிறந்த உடன் இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க குழு ஓன்று அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

விசாரணை குழுவின் அறிக்கையின் படி  டிசம்பர் மாதத்தில் மட்டும் முதல் 24 நாட்களில் 77 குழந்தைகள் உயிர் இழந்துள்ளதாகவும், ஒருநாளைக்கு சராசரியாக 3 குழந்தைகள் பிறந்த உடன் உயிரிழப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mystery

அதிலும், 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மட்டும் 10 குழந்தைகள் பிறந்த உடன் உயிர் இழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. குழந்தைகள் உயிர் இழக்க என்னதான் கரணம் என விசாரித்ததில், ஆக்சிஜன் பற்றாக்குறை, சுத்தமான பராமரிப்பு இல்லாமல் நோய்த்தொற்று காரணமாக குழந்தைகள் உயிர் இழந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனே மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் வேறொரு தலைமை மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தின் உண்மை நிலையை கண்டறிய தலைமை அரசு மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணை நடத்திவருகிறது.