இந்தியா

நடுவானில் பரந்த விமானம்.. திணறிய 7 வயது சிறுமி.. சோதனை செய்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..

Summary:

விமானத்தில் சென்ற 7 வயது சிறுமி நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் சென்ற 7 வயது சிறுமி நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி Ayushi Punvasi Prajapati. இவர் தனது தந்தையுடன் தனது மருத்துவ சிகிச்சைக்காக லக்னோவில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சிறுமிக்கு திடீரெனெ உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர்கள் சென்ற விமானம் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை சோதிப்பதற்காக தயாராக இருந்த மருத்துவ குழு சிறுமி விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதும் அவரை சோதனை செய்துள்ளது.

மருத்துவர்களின் சோதனையில், சிறுமி ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. சிறுமிக்கு ஹூமோகுளோபின் குறைபாடு இருந்ததால் விமானம் அதிக உயரத்தில் பறந்தபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அதனால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டநிலையில், இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement