இந்தியா

கொடூர நோய்..! கண்கள் பிதுங்கி வெளியேறிய பயங்கரம்..! மீண்டும் பார்வைத் திறன் பெற்ற சிறுவன்..!

Summary:

7 years old boy lost vision and get it back

அசாம் மாநிலத்தை சேர்ந்த சாகர் என்ற 7 வயது சிறுவனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து அவனது கண் வீங்கி, கண்ணில் இருந்து இரத்தம் வழிய தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் நோய் தீவிரமடைந்ததை அடுத்து சிறுவனின் இரண்டு கண்களும் பார்வை இழந்துள்ளது.

தங்கள் மகனின் நிலைமையை நினைத்து வருந்திய பெற்றோர், அவனை எப்படியவது காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பெங்களூருவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிறுவனை அனுமதித்தனர். சிறுவனை காப்பாற்ற டாக்டர் சுனில் பாத் தலைமையிலான மருத்துவக்குழு பொறுபேர்த்துக்கொண்டது.

சிறுவனின் மருத்துவ உதவிக்கு பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பண உதவி வழங்கினார். இதனை அடுத்து கீமோ தெரபி சிகிச்சை மூலம் சிறுவனின் பிரச்சனைக்கு காரணமாக இருந்து கட்டிகள் நீக்கப்பட்டு தற்போது சிறுவனுக்கு ஒரு கண்ணில் பார்வை வந்துள்ளது.

மற்றொரு கண்ணில் இன்னும் கட்டிகள் சிறிதளவு இருப்பதாகவும், அந்த கட்டிகளும் விரைவில் மறைந்து சிறுவனுக்கு மற்றொரு கண்ணிலும் பார்வை கிடைத்துவிடும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Advertisement