இந்தியா

63 வயதிலும் அடங்காத ஆசை.. 42 வயது 6 வது மனைவி.. 7 வது திருமணத்திற்கு தயாராகும் கணவர்.. அவர் கூறும் அதிர்ச்சி காரணம்..

Summary:

63 வயதில் 7 வது திருமணத்திற்கு தயாரான கணவரால் 6 வது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

63 வயதில் 7 வது திருமணத்திற்கு தயாரான கணவரால் 6 வது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் பகுதியை சேர்ந்தவர் அய்யூப் தேகியா. தற்போது 63 வயதாகும் இவர் கடந்த வரும் செப்டம்பர் மாதம் 42 வயது பெண்மணி ஒருவரை 6 வதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்திவந்தநிலையில், தனது மனைவி தன்னுடன் உறவுகொள்ள மறுப்பதாக கூறி தனது 6 வது மனைவியை பிரிந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், தனக்கு இதயநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் இருப்பதால் தான் உறவுகொள்ள தனக்கு ஒரு மனைவி வேண்டும் எனவும், ஆனாலும் என்னுடன் உறவு வைத்துக்கொண்டால் தனக்கு தொற்று ஏற்படுமோ என அஞ்சி, தனது மனைவி தன்னுடன் உறவுவைத்துக்கொள்ள மறுப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், தேகியாவின் முதல் மனைவி தனது 5 பிள்ளைகளுடன் அதே கிராமத்தில் வசித்துவருகிறார். அவர்களின் பிள்ளைகளுக்கு 20 வயது முதல் 35 வயது வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 7 வது திருமணத்திற்கு தயாரான தனது கணவர் குறித்து தேகியாவின் 6 வது மனைவி தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்த புகாரில், தனது கணவருக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் நடந்தது தனக்கு தெரியாது எனவும், அவர்களை ஏன் அவர் பிரிந்தார் என்பதும் தனக்கு தெரியவில்லை எனவும், விதவையாக இருந்த என்னிடம், அதிகம் பணம், நகை தருவதாக கூறி அவர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இரண்டு தரப்பிலும் விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement