இந்தியா

40 வருடங்களாக கண்ணாடிகளை சாப்பிட்டு வாழ்ந்த நபர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வீடியோ பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!

Summary:

60 year oldman eating glass and living


மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியைச் சேர்ந்தவர் தயாராம் எனும் 60 வயது நிரம்பிய நபர், அவரது சிறு வயதில் இருந்தே கண்ணாடி துண்டுகள் சாப்பிடுவடை பழக்கமாக வைத்துள்ளார். இவர் 45 வருடமாக கண்ணாடி துண்டுகளை சாப்பிட்டு வருகிறார்.

இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்று கேட்டபோது, அவர் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சாதரணமாக சிரித்து கொண்டே கூறுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் எதையாவது செய்ய வேண்டும் என்று கண்ணாடித் துண்டுகளை வாயில் போட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.

ஆனால் அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது. இதனால் ஒருகட்டத்திற்கு பிறகு எனக்கு இந்த பழக்கத்தை விடமுடியவில்லை. இது உண்மையிலேயே உடலுக்கு ஆபத்தான ஒன்று. யாரும் இதை பின்பற்ற வேண்டாம். இதைச் சாப்பிடுவதால் எனக்கு இதுவரை பாதிப்பில்லை என்றாலும் பற்கள் பாதிப்படைந்துள்ளது.

எனது குடும்பத்தினருக்கும் இது தெரியும். திருமணமான புதிதில், என் மனைவி நான் கண்ணாடி துண்டுகள் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள், கடந்த 40, 45 வருடங்களாக இதை சாப்பிட்டு வருகிறேன். இப்போது குறைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இவர் கண்ணாடி துண்டுகள் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement