இப்படி ஒரு நோயா.? தலை முடியை உண்ணும் 16 வயது சிறுமி.! என்ன காரணம்.?



500 gram hairball removed from girl’s stomach  Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/87212937.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

குஜராஜ் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி. இவரது தாய் அதே பகுதிகளில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

அந்த சிறுமி தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. சரியாக சாப்பிடுவதை நிறுத்தியதால் உடல் எடை குறைந்துள்ளது. அவரது உணவில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட அவரது குடும்பத்தினர் சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, அந்த சிறுமியின் வயிற்றில் முடி உருண்டை இருந்துள்ளது. மேலும் இந்த முடி உருண்டையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் அடைத்திருந்த முடி உருண்டை அகற்றப்பட்டது.

முடி சாப்பிடும் பழக்கத்தால் சிறுமிக்கு இரண்டு முறை இதே பிரச்சனை வந்துள்ளது. முந்தைய அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சிறுமிக்கு மனநோய் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கவில்லை, எனவே அவர் முடி உண்ணுவதைத் தொடர்ந்துள்ளார். சிறுமி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கவனித்தனர். சிறுமி முடியை தலையில் இருந்து பறித்தும், மேலும் சீப்பில் சேகரிக்கப்பட்டவற்றையும் சாப்பிடுகிறாள். மனநல சிகிச்சைக்கு பின்னரே அவரது மனச்சோர்வுக்கான சரியான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.