கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த எத்தனை நாள் தேவை தெரியுமா! ஆய்வாளர்கள் கருத்து.49-days-required-to-controld-to-corona

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் தாக்கம் இன்று இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுனை அறிவித்தது.

அந்த 21 நாட்கள் லாக்டவுன் மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் லாக்டவுன் அறிவித்தது மட்டுமின்றி 21 நாட்களுக்கு பிறகு லாக்டவுன் தொடராது என்றும் கூறியுள்ளது. ஆனால் ஆய்வாளர்கள் தற்போது புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளனர்.

corona

அதாவது கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த 49 நாட்கள் தேவைப்படும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் இரண்டு இந்தியர்கள் புதிய ஆய்வை மேற்கொண்டு இந்த தகவலை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த தொடர் 49 நாட்கள் லாக்டவுன் செய்யப்பட்டால் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தி நோயின் தாக்கத்தை குறைக்க முடியும் என்று கூறியுள்ளனர்.