பிரியாணி வாங்கிய வகையில் ரூ. 43 லட்சம் செலவு!,, ஒரே நாளில் ஆட்டையை போட்ட நிர்வாகி..!

பிரியாணி வாங்கிய வகையில் ரூ. 43 லட்சம் செலவு!,, ஒரே நாளில் ஆட்டையை போட்ட நிர்வாகி..!


43 lakhs spent on providing biryani to football team players

ஜம்மு காஷ்மீர் ஸ்போர்ட்ஸ் கவுன்சில், ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்கத்திற்கு வழங்கிய விளையாட்டு மேம்பாட்டு நிதி  ரூ.45 லட்சம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்த விசாரணையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் கால்பந்து போட்டிகளை நடத்தவும், கேலோ இந்தியா, முப்தி நினைவு தங்கக் கோப்பை உள்ளிட்ட கால்பந்து போட்டி தொடர்களை நடத்தவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஊழல் நடந்ததுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிதி முறைகேடு குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கூறுகையில், போட்டிகளில் பங்கேற்ற கால்பந்து அணி வீரர்களுக்கு பிரியாணி வழங்கிய வகையில் ஸ்ரீநகரில் உள்ள பிரபல உணவகத்திற்கு சுமார் ரூ.43 லட்சத்து 6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டதாக, ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க நிர்வாகிகள் கணக்கு காட்டியுள்ளனர்.

ஆனால், இதுவரை நடத்தப்பட்ட எந்த போட்டிகளிலும் எந்த அணி வீரர்களுக்கு பிரியாணி வழங்கியதற்கு போதிய ஆதாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நிர்வாகிகள் சமர்ப்பித்துள்ள ரசீதுகள் போலியானவை. மேலும், பிரபல நிறுவனங்களுக்கு பல்வேறு சேவைகளுக்காக பணம் வழங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து ஊழல் செய்துள்ளனர்.

இந்த முறைகேடு காரணமாக, ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க தலைவர் ஜமீர் அகமது தாகூர், பொருளாளர் எஸ்.எஸ்.பண்டி மற்றும் தலைமை நிர்வாகி எஸ்.ஏ.ஹமீது உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.