கொரோனாவுக்கு மத்தியிலும் ராணுவத்தினர் அதிரடி வேட்டை..! 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!3 terrorist killed

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

காஷ்மீரில் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்ரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் தகவலின் படி இன்று காலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

army

பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்து சுற்றி வளைத்தபோது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரைசுட்டனர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

அங்கு நடந்த துப்பாக்கிசூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பொதுமக்கள் மூவரைக்கொன்ற பயங்கரவாதிகள் இவர்கள் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளது.