டெல்லியில் பரபரப்பு...இருமல் மருந்தை சாப்பிட்டு 3 குழந்தைகள் உயிரிழப்பு...

டெல்லியில் பரபரப்பு...இருமல் மருந்தை சாப்பிட்டு 3 குழந்தைகள் உயிரிழப்பு...



3 -Children-Die-After-Consuming-Cough-Syrup-Prescribed

டெல்லியில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை சாப்பிட்டு 3 குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

டெல்லியில் இயங்கி வரும் மோஹல்லா மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை சாப்பிட்டு 3 குழந்தைகள் பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து மருத்துவ மனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

3 children

இச்சம்பவம் குறித்து மத்திய அரசின் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை கூறும்போது, கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மட்டும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் (இருமல் மருந்து) நச்சு காரணமாக 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று முதல் ஆறு வயதுக்கு உட்பட்டவர்கள். 

இதில் பெரும்பாலான குழந்தைகள் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது. இந்த விபரம் தொடர்பாக டெல்லி அரசு 4 பேர் அடங்கிய விசாரணை குழு ஒன்றை அமைத்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.