டேய் என்னடா பண்ற... ஆன்லைன் மருத்துவ ஆலோசனையில் பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த இளைஞர்...மருத்துவர் ஷாக்!!



 21 years young man posing nuded infornt of lady doctor

கேரளாவில் சுகாதாரத்துறை சார்பில் இ சஞ்சீவினி என்ற மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகள் வீட்டில் இருந்த படியே தங்களது மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான ஆலோசனைகளை பெற்று பயன் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

அதன்படி நேற்று முன்தினம் பத்தனம்திட்டை மாவட்டம் கோன்னி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது ஆன்லைனில் திருச்சூரை சேர்ந்த முகமது சுகைப்(21) என்ற இளைஞர் ஒருவர் மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

Lady doctor

அந்த இளைஞர் பேசி கொண்டிருக்கும் போதே திடீரென தனது ஆடைகளை களைந்து பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர் ஆன்லைன் இணைப்பை கட் செய்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் நிர்வாண போஸ் கொடுத்த முகமது சுகைப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு மருத்துவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.